Home Featured இந்தியா அருண் ஜெட்லி தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு!

அருண் ஜெட்லி தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு!

943
0
SHARE
Ad

arun-jaitleyபுதுடில்லி – கோவா முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவிருக்கும் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்  பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, தற்காப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வரை பாஜக சார்பில் நியமித்ததும், மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் புதிய தற்காப்பு அமைச்சரும் நியமிக்கப்படுவார்.