இதைத் தொடர்ந்து அடுத்த நிதியமைச்சராக யார் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் எழுந்துள்ளது.
எனினும் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கட்சிக்கும் நாட்டுக்கும் பணியாற்ற தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
அருண் ஜெட்லி பாஜக அமைச்சரவையில் திறன்வாய்ந்த அமைச்சராகப் பார்க்கப்பட்டாலும் அவரது பல முடிவுகள் பொதுமக்களிடையே கடும் சர்ச்சைகளை எழுப்பின.
உதாரணமாக, பணமதிப்பீட்டு இழப்பு முடிவினால் பாஜக ஆட்சியே கவிழ்ந்து விடும் என்ற அளவுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. அவரது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமுலாக்கமும் பலத்த எதிர்ப்புகளை நாடெங்கும் கிளப்பியது.
இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நலத் திட்டங்களை அமுல்படுத்தவும், பாஜகவின் சார்பில் மோடி நிறுத்தப் போகும் புதிய நிதியமைச்சர் யார் என்ற ஆர்வம் இந்திய அரசியல் வட்டாரங்களில் பிறந்துள்ளது.
இதற்கிடையில் இன்று புதன்கிழமை (இந்திய நேரப்படி) இரவு 8.30 மணியளவில் பிரதமர் மோடியை அருண் ஜெட்லி சந்திக்கவிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.