Home இந்தியா அருண் ஜெட்லி இல்லம் வந்தார் மோடி – அமைச்சரவையில் நீடிக்க வற்புறுத்துவாரா?

அருண் ஜெட்லி இல்லம் வந்தார் மோடி – அமைச்சரவையில் நீடிக்க வற்புறுத்துவாரா?

980
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 11.20 மணி நிலவரம்) நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி அந்தக் கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக நடப்பு நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாலை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவும், தனது அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வற்புறுத்தவும், பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி  இந்திய நேரப்படி இன்று இரவு 8.45 மணியளவில் அருண் ஜெட்லியின் இல்லம் வந்தடைந்தார்.

தற்போது அவர் அருண் ஜெட்லி இல்லத்தில் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி்க் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.