Home Featured நாடு கிம் ஜோங் நம் உடல் பெய்ஜிங் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகின்றது!

கிம் ஜோங் நம் உடல் பெய்ஜிங் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகின்றது!

1017
0
SHARE
Ad

kim-jong-nam-0கோலாலம்பூர் – கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் உடல், சீனாவின் பெய்ஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் பிணவறைக்கு வந்த சாம்பல் நிறத்திலான வாகனத்தில், கிம் ஜோங் நம்மின் உடல் ஏற்றப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக முக்கிய ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, “மிகவும் தீவிரமான” முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, கிம் ஜோங் நம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் இரு பெண்களால் கொடிய இரசாயனமான விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்டை முகத்தில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக வடகொரியா, மலேசியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வடகொரியாவில் இருந்த மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.