சென்னை – இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்த மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது சென்னை வருகை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நஜிப், ‘சென்னை வந்தடைந்திருக்கிறேன். எனது சொந்த இல்லத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
டுடர்ட்டேயுக்கு நன்றி
தற்போது சென்னையில் இருக்கும் நஜிப், பிலிப்பைன்ஸ் அதிபர் டுடர்ட்டேயுடன் நேரடியாகத் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு, அபு சாயாப் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட 5 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதற்காக தனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று வியாழக்கிழமை காலை சென்னை புறப்படுவதற்கு முன்பாக அபு சாயாப் குழுவினரிடமிருந்து மீட்கப்பட்டவர்களை நஜிப் தனது இல்லத்தில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நஜிப் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை அபு சாயாப் குழுவினரால் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டவர்கள்…