Home Featured தமிழ் நாடு சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன் நஜிப்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன் நஜிப்!

690
0
SHARE
Ad

najib-chennai-with media-

சென்னை – கடந்த இரண்டு நாட்களாக தனது இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் சென்னையில், தனது வருகை குறித்து செய்திகள் வழங்கி வரும் பத்திரிக்கையாளர்களோடு நினைவுக்காக நேற்று எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

இந்தப் புகைப்படத்தை நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நஜிப்பின் இந்திய வருகையில் பல தமிழ்ப் பத்திரிக்கையாளர்களும் இணைந்திருக்கின்றனர்.

படத்தில் வலது கோடியில் தமிழ் மலர் நாளிதழின் நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமியும், மக்கள் ஓசை நாளிதழின் ஆசிரியர் டத்தோ எம்.இராஜனும் நிற்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமையுடன் சென்னை வருகையை முடித்துக் கொண்ட நஜிப் இன்று சனிக்கிழமை முதல் புதுடில்லியில் தனது இந்திய வருகையைத் தொடர்கிறார்.