Home Featured நாடு மகாதீர்-நஸ்ரி விவாதம் இரத்து! கிட் சியாங் கண்டனம்!

மகாதீர்-நஸ்ரி விவாதம் இரத்து! கிட் சியாங் கண்டனம்!

660
0
SHARE
Ad

mahathir-nazri-comboஷா ஆலாம் – பொதுமக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என நம்பகத்தனமான தகவல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ஷா ஆலாம் நகரில் துன் மகாதீருக்கும், டான்ஸ்ரீ நஸ்ரி அசிசுக்கும் இடையில் நடைபெறவிருந்த பொது விவாதத்தை காவல் துறையினர் இரத்து செய்தனர்.

சிலாங்கூர் மாநிலக் காவல் துறையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் புவாட் அப்துல் லத்திப் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.

இதிற்கிடையில் காவல் துறையின் இந்த நடவடிக்கை குறித்து ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கண்டனம் தெரிவித்தார். “தனியார் அரங்கம் ஒன்றில் நடைபெறும் விவாதம் எப்படி பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

நஜிப் அரசாங்கம் பொதுமக்களைச் சந்திக்க அஞ்சுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது என்றும் கிட் சியாங் சாடியிருக்கின்றார்.