Home Featured இந்தியா புதுடில்லியில் பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா! (படக் காட்சிகள்)

புதுடில்லியில் பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா! (படக் காட்சிகள்)

842
0
SHARE
Ad

subra-modi-najib visit-new delhi-2புதுடில்லி – நேற்று சனிக்கிழமை ஏப்ரல் 1-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாளாகும்.

கடந்த ஆண்டு தனது 63-வது பிறந்த நாளை கோலாலம்பூரில், மஇகா தலைமையகத்தில் கட்சியினரோடுக் கொண்டாடிய அவர் இந்த முறை புதுடில்லியில் தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

ஆனால், கொண்டாட்டங்கள் என்பதற்கு பதிலாக, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இந்திய வருகைக்கான அதிகாரபூர்வ குழுவில் இடம் பெற்றிருந்ததால், பல்வேறு சந்திப்புகள், அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் என நேற்றைய அவரது பிறந்த நாள் கடந்து சென்றது.

#TamilSchoolmychoice

புதுடில்லியில் டாக்டர் சுப்ராவின் சந்திப்புகள் குறித்த படக் காட்சிகள்:

subra-modi-new delhi-najib visit-1மீண்டும் மோடியுடன் – 2015-ஆம் ஆண்டின் இறுதியில் நரேந்திர மோடியின் மலேசிய வருகையின் போது உடன்செல்லும் அமைச்சராக மோடியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுப்ரா, நேற்று மீண்டும் மோடியைச் சந்தித்து அளவளாவினார்…

subra-najib-pranab meeting-new delhiஇந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியுடன் நஜிப் நடத்திய சந்திப்பின்போது டாக்டர் சுப்ரா…

subra-najib-delegation-new delhi-நஜிப்பின் அதிகாரபூர்வ குழுவில் இணைந்திருக்கும், அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்களுடன் டாக்டர் சுப்ரா…

subra-pranab mukerjee-najib visit-அதிபர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கிறார் சுப்ரா….

subra-najib-new delhi-najib visitபுதுடில்லியில் பிரதமரின் அதிகாரத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமருடன் …

-செல்லியல் தொகுப்பு