கோலாலம்பூர் – ஷரியா நீதிமன்றங்களை வலுப்படுத்தக் கூறும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின், தனிப்பட்ட உறுப்பினர் சட்டதிருத்த மசோதா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் முக்கிய சட்ட திருத்த மசோதாக்களில், ஹாடியின் மசோதா தான் முதலில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் தொடர்பான மசோதாக்கல் அனைத்தும் பின்வாங்கப்பட்டு விட்டதால், இன்றைய நாளில் ஹாடியின் மசோதா தான் முதன்மையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் (Criminal Jurisdiction) அல்லது ஆர்யுயு355 என்ற சட்டதிருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் இன்று மதியம், கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு ஹாடி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.