கான்ஸ் (பிரான்ஸ்) – பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கான்ஸ் (Cannes) உலகத் திரைப்படவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத அசம்பாவிதங்களின் காரணமாக, இந்த முறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இராணுவமும், காவல் துறையினரும் குவிக்கப்பட்ட நிலையில் கான்ஸ் திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இந்திப் பட நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கான்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட தனது படங்களைப் பதிவிட்டிருக்கின்றார்.
அந்தப் படக் காட்சிகளில் சில!
திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை என்றால் அவர் எந்த மாதிரியான காதணி அணிகிறார் – எப்படி அணிகிறார் – எவ்வளவு மதிப்புள்ள காதணி – என்பதெல்லாம் கூட இரசிகர்களின் பார்வைக்கு விருந்துதான்!