Home Featured கலையுலகம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் பன்முகக் கலைஞன் டிகே!

இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் பன்முகக் கலைஞன் டிகே!

1155
0
SHARE
Ad

DKகோலாலம்பூர் – தினேஸ் குமார் .. சுருக்கமாக டிகே.. நடிப்பு, நடனம், அறிவிப்பு, பாடல், பாடல்வரிகள், தயாரிப்பு என பலதுறைகளிலும் கால்பதித்து வரும் திறமையான கலைஞர்.

பினாங்கில் பிறந்து, சுங்கைப் பட்டாணியில் வளர்ந்த டிகேவுக்கு சிறுவயது முதலே சினிமாவில் நாட்டம் அதிகம். பள்ளிப் பருவத்திலேயே மிமிக்ரி மீது ஆர்வம் கொண்டு, அதற்கான பயிற்சிகளை எடுத்திருக்கிறார்.

பின்னர், பள்ளித் தோழர்களைக் கொண்டு ஃப்ரீடம் பாய்ஸ் என்ற நடனக்குழுவொன்றை ஆரம்பித்து, அஸ்ட்ரோ முதன் முதலாக ஆட்டம் நூறு வகை என்ற நடன நிகழ்ச்சியைத் தொடங்கியபோது அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு நடுவராக வந்திருந்த கலா மாஸ்டரிடம் அதிகமான பாராட்டுகளைப் பெற்றவர்.

#TamilSchoolmychoice

இப்படித் தொடங்கிய டிகே-வின் கலைப்பயணம்.. இன்று பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, பெரிய பெரிய மேடை நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக அசத்திக் கொண்டிருக்கிறார்.

DK2அண்மையில், அஸ்ட்ரோ வானவில்லில் வெளியான ‘சந்தியா’ என்ற தொலைக்காட்சிப் படத்தில் கதாநாயகி ரெனீத்தாவுடன், காவல்துறை அதிகாரியாக நடித்து அனைவரையும் உற்று நோக்க வைத்தார்.

மிக இயல்பான உடல்மொழியிலும், கம்பீர முகபாவணைகளிலும் காவல்துறை அதிகாரியாக டிகே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவரின் தற்போதைய முயற்சி, “வைஃபி என் குல்ஃபி” என்ற மியூசிக் வீடியோ. அதில் தானே நடித்திருப்பதோடு, தனது மனைவியையே கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

“என் மனைவி தான் எனக்கு எல்லாம்.. நான் எந்த முயற்சி செஞ்சாலும் அதுக்கு மொத ஆளா ஆதரவு கொடுக்குறவங்க.. ஊக்கப்படுத்துறவங்க அவங்க தான். நான் அவங்க மேல வச்சிருக்கிற அன்பை தான் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறேன். என்னைப் போல மனைவி மேல அன்பா இருக்குற எல்லாருக்கும் இந்தப் பாடல் நிச்சயமாக பிடிக்கும்” என்கிறார் டிகே.

DK1அவர் சொன்னபடி, முதலில் நடிக்கத் தயங்கிய தனது மனைவியை ஊக்கப்படுத்தி நடனம் கற்றுக் கொடுத்து “வைஃபி என் குல்ஃபி” பாடலில் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் டிகே.

கடந்த மே 16-ம் தேதி, ‘வைஃபி என் குல்ஃபி’ என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக யுடியூப்பில் வெளியாகி, இதுவரை 11,000 பேருக்கும் மேல் பார்வையிட்டிருக்கின்றனர்.

விக்னேஷ் புஷ்பநாதன் இயக்கியிருக்கும் இப்பாடல் காட்சிகளில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

லக்பர்ன் இசையமைக்க, டிகே, புவனன், ஜேகே மகா ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருக்கின்றனர். மிட்செல் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அக்காணொளியை இங்கே காணலாம்:-

https://www.youtube.com/watch?v=I1YiLUGvKsw