நேற்று மதியம் அவ்விமானம் தொடர்பில் இருந்து விடுபட்டதில் இருந்து தேடுதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், நேற்று இரவு அதன் பாகங்கள் காணப்பட்டிருக்கின்றன.
மியன்மாரின் தென் நகரமான மையேக்கிலிருந்து யாங்கூன் நோக்கிப் புறப்பட்ட அவ்விமானத்தில், 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
மையேக்கைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அதிகாரி நாயிங் லின் ஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தற்போது உடைந்து நொறுங்கிய விமானத்தின் பாங்கள் டாவேய் நகரில் இருந்து 136 மைல் தொலைவில் கடற்பகுதியில் காணப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.