கோலாலம்பூர் – மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் செயலாளராக எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அவருக்கு டத்தோ விருது வழங்கப்பட்ட இன்றைய மாமன்னர் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்ட இளைஞர் விளையாட்டு அமைச்சர் டத்தோ எம்.சரவணன் பெரியசாமிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய மாமன்னர் பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு ஜோகூரைச் சேர்ந்த கேலாங் பாத்தா மஇகா தொகுதி தலைவர் கண்ணன், மற்றும் மஇகா சிலாங்கூர் மாநிலச் செயலாளர் செர்டாங் தொகுதி மஇகா தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோரும் டத்தோ விருது பெற்றனர்.