Home நாடு தமிழ் மலர் பெரியசாமிக்கு டத்தோ விருது – சரவணன் வாழ்த்து தெரிவித்தார்!

தமிழ் மலர் பெரியசாமிக்கு டத்தோ விருது – சரவணன் வாழ்த்து தெரிவித்தார்!

2036
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் செயலாளராக எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

periasamy-tamil malar-saravanan-fullமக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பெரியசாமி தற்போது தமிழ் மலர் நிர்வாகியாகவும், பங்குதாரராகவும் இருக்கிறார்.

அவருக்கு டத்தோ விருது வழங்கப்பட்ட இன்றைய மாமன்னர் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்ட இளைஞர் விளையாட்டு அமைச்சர் டத்தோ எம்.சரவணன் பெரியசாமிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

samyvellu-tun award-09092017 (3)மாமன்னர் பிறந்த நாளில் துன் விருது பெற்ற மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுக்கும் டத்தோ சரவணன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

samyvellu-tun award-09092017 (4)டத்தோ விருது பெறும் மற்ற இந்தியப் பிரமுகர்கள்

samyvellu-tun award-09092017 (1)இன்று டத்தோ விருது பெற்ற கண்ணன், ரவிச்சந்திரன், துன் விருது பெற்ற சாமிவேலு, டான்ஸ்ரீ விருது பெற்ற விக்னேஸ்வரன், ஜி.ராஜூ ஆகியோருடன் டாக்டர் சுப்ரா…

இன்றைய மாமன்னர் பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு ஜோகூரைச் சேர்ந்த கேலாங் பாத்தா மஇகா தொகுதி தலைவர் கண்ணன், மற்றும் மஇகா சிலாங்கூர் மாநிலச் செயலாளர் செர்டாங் தொகுதி மஇகா தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோரும் டத்தோ விருது பெற்றனர்.