Home இந்தியா முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயந்தி இல்லத்தில் சிபிஐ சோதனை

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயந்தி இல்லத்தில் சிபிஐ சோதனை

916
0
SHARE
Ad

jayanthi nadarajan-congress-indiaசென்னை – முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தமிழகத்தின் ஜெயந்தி நடராஜன் மீது இந்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று சனிக்கிழமை ஊழல் குற்றச்சாட்டு வழக்கொன்றைப் பதிவு செய்தது.

ஜெயந்தி நடராஜன் இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்திய சிபிஐ சில ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

சுற்றுச் சூழல் அனுமதிகளை சட்டத்துக்கு மீறிய வகையில் வழங்கிய காரணத்தினால் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் விசாரணைக்காக ஜெயந்தி நடராஜன் அழைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.