Home கலை உலகம் பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஷால் – கேத்ரின் தெரசா!

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு விஷால் – கேத்ரின் தெரசா!

1172
0
SHARE
Ad

vishnu vishal-kathreen theresaசென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்திய வேளையில், இந்த வாரம் வெளியான “கதாநாயகன்” படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் மற்றும் அந்தப் படத்தின் கதாநாயகி கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

அவர்கள் இருவரும் கதாநாயகன் படத்தின் விளம்பரத்திற்காக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்கள் என்பது தெரிகிறது. கொஞ்சநேரம் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்காக லக்சரி பட்ஜெட் எனப்படும் வசதி வாழ்க்கைக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவி செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினர்.

#TamilSchoolmychoice

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 76-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் 25 நாட்களில் இந்த நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வரும்.