Home வணிகம்/தொழில் நுட்பம் பெர்டானா இளம் வணிகர் விருதுகள் – பரிந்துரை சமர்ப்பிக்க செப்டம்பர் 15 இறுதி நாள்

பெர்டானா இளம் வணிகர் விருதுகள் – பரிந்துரை சமர்ப்பிக்க செப்டம்பர் 15 இறுதி நாள்

1457
0
SHARE
Ad

perdana-young biz award-SeNet) 17082017 (7)கோலாலம்பூர் – 2017-ஆம் ஆண்டுக்கான பெர்டானா சிறந்த இளம் வணிகர் விருதுகளை வழங்குவதற்கான விழா ஏற்பாடுகளை ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பான முறையில் செய்து வரும் நிலையில் விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் செப்டம்பர் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மலேசிய இந்தியர் வணிகர்களுக்கான கூட்டுறவுக் கழகத்தின் (Malaysian Indian Entrepreneur Cooperative – MIEC) தலைவரான மதுரைவீரன் மாரிமுத்து (படம்) இந்த விருது வழங்கும் விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவராகவும் செயல்படுகிறார்.

mathu marimuthu-mic cwcபெர்டானா விருதுகள் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மதுரைவீரன் மாரிமுத்து..

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழாவுக்கான அதிகாரபூர்வத் தொடக்க விழா, கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் விளையாட்டுத் துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணனும் இந்த பெர்டானா விருதுகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சமூக வணிகர்கள் தொடர்பு இயக்கமான சீநெட் (SeNet) அமைப்புடன் இணைந்து இந்த பெர்டானா சிறந்த இளம் இந்திய வணிகர் விருதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

perdana-young biz award-SeNet) 17082017 (2)தேர்வுக் குழுத் தலைவர் ராஜசிங்கம், டாக்டர் சுப்ரா, மது மாரிமுத்து…விருதுகள் தொடக்க விழாவில்…

2005-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த விருது விழா இந்த ஆண்டு 12-வது முறையாக நடத்தப்படுகிறது.

இதனை நடத்தும் மலேசிய இந்திய வணிகர் கூட்டுறவுக் கழகம் இந்திய வணிகர்களை பொருளாதாரத் துறையில் முன்னேற்றும் நோக்கத்துடன் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.

perdana-young biz award-SeNet) 17082017 (4)விருதுகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்…

சிறந்த இந்திய இளம் வணிகர் விருதுகள் வளர்ந்து வரும் இந்திய வணிகர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகும். அவர்களை இவ்வாறு ஆதரிப்பதன் மூலம் அவர்கள் வணிக உலகில் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பதோடு,  அவர்களின் வெற்றிச் செய்திகள், சாதனைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களை அங்கீகரிக்க முடியும் என்பதோடு, வளர்ந்து வரும் மற்ற இந்திய இளம் வணிகர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் தளமாகவும் இந்த விருதுகள் செயல்படும்.

perdana-young biz award-SeNet) 17082017 (5)இந்த விருதுகளை வென்றெடுப்பதன் மூலம், இந்திய வணிகர்கள் புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்க முடியும் என்பதோடு, இந்த அங்கீகாரத்தைக் கொண்டும், அறிமுகத்தைக் கொண்டும், வணிக உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

இந்த விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகள் குழுவில் மிகச் சிறந்த வணிகர்கள், நிபுணர்கள், வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். அனைத்து பரிந்துரைகளையும் ஒரு தனியார் கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் துணையுடன் முறையாகப் பரிசீலித்து, நடுநிலையோடும், எந்தவித பாரபட்சம் இன்றியும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

perdana-young biz award-SeNet) 17082017 (3)பல தனியார் அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்தும் இந்த விருதுகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதே போன்ற இந்திய இளம் வணிகர் விருதுகள் விழாவில் 35 இந்திய வணிகர்கள் தத்தம் துறைகளில் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

டாக்டர் சுப்ரா ஆதரவு

perdana-young biz award-SeNet) 17082017 (6)கடந்த 17 ஆகஸ்ட் 2017-ஆம் நாள் பெர்டானா இந்திய இளம் வணிகர்களுக்கான விருதுகள் விழாவை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இத்தகைய விருதுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் ஏற்பாட்டுக் குழுவினரைப் பாராட்டினார்.

“வணிகத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களில் சிறந்தவர்களை அவர்களின் இளமைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு, அங்கீகரித்து விருதுகள் வழங்கி கௌரவிப்பது அவர்களுக்கு ஊக்கத்தைத் தரும் என்பதோடு, எதிர்காலத்தில் சிறந்த, முன்னேற்றகரமான, ஆற்றல் மிக்க இந்திய வணிக சமூகத்தை உருவாக்குவதற்கான முன்னோடித் திட்டமாகும்”  என்றும் டாக்டர் சுப்ரா தனதுரையில் கூறினார்.

perdana-young biz award-SeNet) 17082017 (9)“பெர்டானா போன்ற விருதுகளைப் பெறும் இந்திய வணிகர்கள் மற்ற வணிகர்களுக்கு முன்னோடிகளாகவும், உதாரண சாதனையாளர்களாகவும் திகழ்வர்” என்றும் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டினார்.

சுமார் 200 வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த தொடக்க விழாவில் விளக்க உரையாற்றியதோடு, இந்த விருதுகள் விழாவிலும் முக்கியப் பங்காற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரியின் தலைவர் ராஜசிங்கம் தேர்வுக் குழுவின் தலைவராகவும் செயல்படுவதற்கு டாக்டர் சுப்ரா பாராட்டு தெரிவித்தார்.

perdana-young biz award-SeNet) 17082017 (8)ராஜசிங்கம் போன்ற வணிகர்கள் வணிகத் துறையில் ஈடுபட்டு, மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னரும், சமுதாயத்திற்காகவும், மற்ற இளம் வணிகர்களை ஊக்குவித்து வளர்த்து விடவும் முன்வருவது மற்ற வணிகர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் டாக்டர் சுப்ரா பாராட்டினார்.

சிறந்த இந்திய இளம் வணிகர்களை அடையாளம் கண்டு பெர்டானா விருதுகளுக்காக பரிந்துரைக்க விரும்பும் அமைப்புகள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

The Executive Secretary , MIEC

Secretariat YIEA 2017

Suite 10-18, 10th Floor, Menara TKSS

No: 206, Jalan Segambut

51200 Kuala Lumpur

Email: secretary@kuimb.com

Website: www.kuimb.com