Home நாடு “பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களைத் தூண்ட வேண்டாம்! அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” மகாதீர்

“பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களைத் தூண்ட வேண்டாம்! அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” மகாதீர்

981
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களை எனக்கு எதிராகத் தூண்ட வேண்டாம் என்று இந்தோனிசியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ சாராயின் முகமட் ஹசிம்மிற்கு எழுதிய கடிதத்தில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களின் வெறுப்பைத் தூண்டுவதால் 14-ஆவது பொதுத் தேர்தலில் அவர்கள் இங்கு வாக்களிக்கப் போவதில்லை என்று மகாதீர் கிண்டலடித்தார்.

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் நடந்த கூட்டம் ஒன்றில் மகாதீர் பேசிய இப்பேச்சு சர்ச்சையானது.

“நாட்டின் நற்பெயரைக் காக்க வேண்டியது தூதரின் கடமைதான் என்றாலும் இல்லாத ஒன்றைக் கற்பித்து மற்றவர்களை எனக்கு எதிராகத் தூண்ட வேண்டியதில்லை. பிரதமர் நஜிப் ஊழல் பேர்வழி என்பதையும் நாட்டை சீரழிப்பவர் என்பதையும் இந்தோனிசியர்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஒரு கடற்கொள்ளையரை தங்களின் வழித் தோன்றல் என்று பூகிஸ் இன மக்கள் ஏற்கப் போவதில்லை. அதே நேரத்தில் நான் அனைத்து பூகிஸ் இன மக்களையும் கூறவில்லை. நஜிப்பை மட்டும் கூறினேன்” என்றும் மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த காலத்தில் பூகிஸ் மக்களும் மலாய்க்காரர்கள் உட்பட வேறு பல இனங்களின் உட்பிரிவினரும் கடற்கொள்ளையில் ஈடுபட்டே வந்துள்ளனர். இப்பொழுதும் மலாக்கா நீரிணையில் கடற் கொள்ளை நடக்கிறது. 1எம்டிபி.,சேம நிதி வாரியம் தாபோங் ஹாஜி போன்ற அரசு நிறுவனங்களில் பல கோடி வெள்ளி மோசடியில் நஜிப்பிற்குத் தொடர்பு உள்ளது என்பது உலகறிந்த செய்தியாகும்” என்றும் மகாதீர் மேலும் கூறியுள்ளார்.

துன் மகாதீரின் பேச்சால் மலேசியாவில் வாழும் பூகிஸ் இனத்தவர்களும் இந்தோனிசியர்களும், சுலவேசியில் வாழும் பூகிஸ் இன மக்களும் இந்தோனிசிய மக்களும் மலேசியாவின் மீது கோபமடைந்திருப்பதால்  மகாதீர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தூதர் சாராயின் கேட்டுக் கொண்டிருந்தார்.

இவ்விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் சினமடைந்திருப்பதாகவும், சிலாங்கூர் அரச மன்றம் மகாதீர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்துள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இருப்பினும் மகாதீர் தாம் நஜிப்பை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அனைத்து பூகிஸ் இனத்தவரையும் கடற்கொள்ளையர்கள் எனக் கூறவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

-மு.க.ஆய்தன்