மனித உருக் கொள்ளும் பாம்பு ஒன்றின் கதையான இந்தத் தொடரின் கதாநாயகி மவுனி ராய். கவர்ச்சிகரமான உடலமைப்போடும் வித்தியாசமான, தீட்சண்யமான விழிகளும் கொண்ட மவுனி ராய் விரைவிலேயே இந்தியா முழுமைக்கும் பிரபலமான நட்சத்திரமாகிவிட்டார்.
சல்மான் கான் மவுனி ராயைத் தனது வீட்டிற்கும் அழைத்து விருந்து கொடுத்து, வீட்டைச் சுற்றிக் காண்பித்து கௌரவப்படுத்தியிருக்கிறார். அதற்குப் பதிலாக சல்மானின் பிக்பாஸ் தொலைக்காட்சித் தொடர் அரங்கத்திற்கு வருகை தந்தார் மவுனி ராய்.