Home நாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட1 லட்சம் பேருக்கு 5 கோடி வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட1 லட்சம் பேருக்கு 5 கோடி வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும்!

938
0
SHARE
Ad

Lim-Guan-Engஜோர்ஜ் டவுன் – பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு தலா ஐநூறு ரிங்கிட் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர லிம் குவான் எங் கூறினார்.

சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் “பினாங்கே எழு” (Pulau Pinang Bangkit) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பத்து கோடி வெள்ளியில் ஐந்து கோடி ரிங்கிட்  பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது வணிகர்களுக்கு வழங்க மட்டும் செலவிடப்படும்.
மீதத் தொகை வேறு பல உடனடி சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று லிம் கூறியுள்ளார்.

ஒரு தவணையில் வழங்கப்படும் இந்த ஆறுதல் நிதிக்கு ஒருவர் ஒரு முறை மட்டுமே விண்ணபிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

-மு.க.ஆய்தன்