Home இந்தியா சசிகலா, தினகரன் குடும்பங்களின் 1000 கோடி சொத்துகள் முடக்கம்!

சசிகலா, தினகரன் குடும்பங்களின் 1000 கோடி சொத்துகள் முடக்கம்!

1147
0
SHARE
Ad

sasikala_dinakaran-comboசென்னை – இன்று சனிக்கிழமை 3-வது நாளாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினர் மீதான வருமான வரி இலாகாவினரின் அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடி, சுந்தரக் கோட்டையில் நடத்தும் செங்கமலத் தாயார் கல்லூரியிலும் சோதனைகள் நடத்தப்பட்டு பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இதுவரையில் சசிகலா-தினகரன் குடும்பத்தினரின் இல்லங்கள், அலுவலகங்கள் மீதான வருமான வரி சோதனைகளின் வழி அவர்களின் 1000 கோடி ரூபாய்க்கும் கூடுதலான மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

சசிகலாவின் ஜோதிடர் மற்றும் வழக்கறிஞர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடத்தப்படும் சோதனைகள் எனக் கூறியிருக்கும் தினகரன் இந்த நடவடிக்கையை எதிர்த்துத் தொடர்ந்து போராடப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.

“என் வீட்டில் உள்ள கற்கண்டைக் கூட அவர்கள் வைரமாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் வழக்கமாகச் சாப்பிடும் உணவகங்களில் கூட சோதனைகள் நடந்தேறியிருக்கின்றன” என்றும் தினகரன் திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்டபோது காட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் கர்நாடக அதிமுக பிரமுகருமான புகழேந்தி, சென்னையிலுள்ள வருமான வரி அலுவலகத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.