Home கலை உலகம் சினிமாவில் இருந்து விலகுகிறார் கமல்!

சினிமாவில் இருந்து விலகுகிறார் கமல்!

823
0
SHARE
Ad

kamalhassanசென்னை – வரும் பிப்ரவரி 21-ம் தேதி, தனது அரசியல் பயணத்தை இராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கும் உலகநாயகன் கமல்ஹாசன், அதன் பின்னர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ்நாயுடு ஆகிய படங்கள் வெளியானவுடன், அதன் பின்னர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி முழு நேர மக்கள் சேவையில் ஈடுபடப்போவதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய கமல் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல், ரஜினி இன்னும் அவரது கொள்கைகளை அறிவிக்கவில்லை. அவர் அறிவித்த பின்னர் தான் அது பற்றி யோசிக்க முடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice