Home நாடு மகாதீர், நூருல் இசாவுடனான நல்லுறவு குறித்து மனம் திறக்கும் அஸ்மின்!

மகாதீர், நூருல் இசாவுடனான நல்லுறவு குறித்து மனம் திறக்கும் அஸ்மின்!

1018
0
SHARE
Ad

azmin ali-feature-1கோலாலம்பூர் – சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் ஆகியோருடன் தமக்கு இருக்கும் நல்லுறவு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நெஞ்சு தொற்று காரணமாக தேசிய இருதய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மகாதீர், தன்னைச் சந்திக்க விரும்புவதாக தனது மகன் மூலமாக தகவல் அனுப்பினார் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டிருக்கிறார்.

என்றாலும், மருத்துவர்கள் இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க விரும்பவில்லை என்பதால், தான் இன்னொரு நாள் மகாதீரை மருத்துவமனைக்குச் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதே போல், பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார், தனது உடன் பிறந்த சகோதரி போன்றவர் என்றும், நூருல் இசா குழந்தையாக இருந்த போது, தான் அவரை கையில் ஏந்தியதாகவும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.

நூருல் இசாவின் தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராக இருந்த போது, அவருக்கு தான் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய நேரத்தில், அன்வார் குடும்பத்தினருடன் பலமுறை சுற்றுலாவிற்குச் சென்றிருப்பதாகவும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.