Home நாடு ‘இஸ்ரேல் பேராளர்களுக்கு மலேசியா அழைப்பு விடுக்கவில்லை’

‘இஸ்ரேல் பேராளர்களுக்கு மலேசியா அழைப்பு விடுக்கவில்லை’

1151
0
SHARE
Ad

anifah aman4கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சார்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இஸ்ரேல் பேராளர்களுக்கு மலேசிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

“அவர்களின் வருகை ஐக்கிய நாடுகளின் அழைப்பின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. 9-வது உலக நகர்புற மாநாட்டில், ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது” என அனிபா அமான் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சில தரப்பினர் அரசியல் லாபத்திற்காக இஸ்ரேல் பேராளர்கள் பங்கேற்றது குறித்த தகவலை வெளியிட்டிருப்பதாகவும் அனிபா அமான் சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் நடைபெற்ற 9-வது உலக நகர்ப்புற மாநாட்டில் இஸ்ரேலைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களுடன் அந்நாட்டைச் சேர்ந்த பேராளர்களும் கலந்து கொண்டது குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த கோல திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமாருல் பாஹ்ரின் ராஜா அகமட், இஸ்ரேலுடன் மலேசியா தொடர்பு வைத்திருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.