Home நாடு ‘கிளிங்’ எனக் குறிப்பிட்டதற்காக மகாதீர் மன்னிப்புக் கேட்டார்!

‘கிளிங்’ எனக் குறிப்பிட்டதற்காக மகாதீர் மன்னிப்புக் கேட்டார்!

940
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியர்களைக் குறிக்க ‘கிளிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று செவ்வாய்க்கிழமை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இது குறித்து இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், “இந்திய சமுதாயத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதைக் கூறவில்லை. எனது சிறுவயது முதலே பயன்படுத்தி வருகின்றேன். ஆனால் அது தற்போது அவமதிக்கும் சொல்லாகிவிட்டது” என்று மகாதீர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றில் பேசிய மகாதீர், எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் தேர்தல் ஆணையத்தை, இந்தியர்கள் கூறுவது போல் ‘போடா’ எனக் கூறுவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் இந்தியர்கள் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘கிளிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அதற்கு மஇகா உட்பட இந்தியக் கட்சி மற்றும் அமைப்புகளிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தேசிய மனித உரிமை சமூக அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் மகாதீர் அவ்வாறு கூறக்கூடாது எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.