Home நாடு ‘கெலிங்’ என்ற சொல்லைத் தவிர்க்கவும் – மகாதீருக்கு அம்பிகா வலியுறுத்து!

‘கெலிங்’ என்ற சொல்லைத் தவிர்க்கவும் – மகாதீருக்கு அம்பிகா வலியுறுத்து!

1608
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்தியர்களை ‘கெலிங்’ எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அச்சொல் பிறந்ததற்கு இந்தியர்களின் கலிங்க வரலாறு ஒரு காரணமாக இருந்தாலும் கூட தற்போதைய மலேசிய இந்தியர்கள் மத்தியில் அச்சொல் தரக்குறைவாகவே பார்க்கப்படுகின்றது என்றும் தேசிய மனித உரிமை சமூக அமைப்பின் (HAKAM) தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார்.

மேலும், கெடாவில் ‘கெலிங்’ என்ற சொல் தரக்குறைவாகப் பார்க்கப்படாவிட்டாலும் கூட, இங்கே அந்த சொல் மலேசிய இந்தியர்களை அவமதிக்கும் சொல்லாகவேப் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அம்பிகா விளக்கமளித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றில் பேசிய மகாதீர், எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் தேர்தல் ஆணையத்தை, இந்தியர்கள் கூறுவது போல் ‘போடா’ எனக் கூறுவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் இந்தியர்கள் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘கெலிங்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அது மலேசிய இந்தியர்கள் மத்தியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மஇகா தேசியப் பொருளாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி, மகாதீரின் இந்தக் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மகாதீர் எப்போதும் இனவாதியாகவே இருந்து வருவதாக வேள்பாரி சாடியிருக்கிறார்.

இதனிடையே, தான் கெலிங் என்ற சொல்லைப் பயன்படுத்தியது குறித்து தற்காத்துப் பேசியிருக்கும் மகாதீர், கெடாவில் தான் சிறு வயது முதலே இந்தியர்களை கெலிங் என்று தான் அழைத்து வருவதாகவும், தனது நெருங்கிய நண்பர்கள் கூட, அச்சொல்லைப் பயன்படுத்தியதற்கு இது வரை எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.