Home நாடு செவ்வாய்க்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

செவ்வாய்க்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

939
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல், வேட்புமனுத்தாக்கல் ஆகியவற்றின் தேதிகளை நாளை செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கின்றது.

நாளை காலை 10 மணியளவில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா தலைமையில், புத்ராஜெயாவில் இது குறித்த கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அதன் பிறகு, டான்ஸ்ரீ முகமது ஹாசிம் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவரது அறிவிப்பு டிவி1 மற்றும் டிவி3 ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கிறது.