Home நாடு தேர்தல் 14: சரவாக் ஜசெக ‘ராக்கெட்’சின்னத்தைப் பயன்படுத்துகிறது!

தேர்தல் 14: சரவாக் ஜசெக ‘ராக்கெட்’சின்னத்தைப் பயன்படுத்துகிறது!

776
0
SHARE
Ad

கூச்சிங் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் என கடந்த வெள்ளிக்கிழமை பாசீர் கூடாங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த 3 பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள், இரண்டு விதமான சின்னங்களைத் தேர்தலில் பயன்படுத்தவிருக்கின்றனர்.

இன்று திங்கட்கிழமை கூச்சிங்கில் உள்ள ஜசெக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில ஹராப்பான் தலைவர் சோங் சியங் ஜென் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஜசெக ராக்கெட் சின்னத்திலும், பிகேஆர் மற்றும் அமனா பிகேஆர் சின்னத்தையும் பயன்படுத்தும் என சோங் சியங் ஜென் அறிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்குள் கலந்தாலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.