நாளை வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியிடப்படும் என்றும், புதிய படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் விஷால் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நாளை முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெர்குரி’ வெளியிடப்படும் என்றும், அடுத்த மாதத்தில் ரஜினியின் ‘காலா’ திரைப்படமும், கமலின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படமும் வெளியாகும் என விஷால் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, ஜூன் மாதத்திலிருந்து திரையரங்கு டிக்கெட்டுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை இல்லாத படி பார்த்துக் கொள்ளப்படும் என்றும் விஷால் தெரித்திருக்கிறார்.