Home நாடு ஜெலுபுவில் தேவமணி போட்டியிடலாம்

ஜெலுபுவில் தேவமணி போட்டியிடலாம்

854
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தெலுக் கெமாங் (தற்போதைய புதிய பெயர் போர்ட்டிக்சன்) நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றாக, மஇகாவுக்கு கிடைக்கவிருக்கும் ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிடுவார் என மலேசியாகினி இணைய ஊடகம் ஆரூடம் கூறியுள்ளது.

மஇகா தலைமைத்துவம் இந்தத் தொகுதி மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்கு வேட்பாளராக தேவமணியை நிறுத்துவதற்கும் இணங்கி விட்டதாக மலேசியாகினியின் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

ஜெலுபு தொகுதி மஇகாவுக்கு வழங்கப்படுவதற்கு அந்தத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ராய்ஸ் யாத்திம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வி.எஸ்.மோகனுக்கு தொகுதி எங்கே?

டத்தோ வி.எஸ்.மோகன்
#TamilSchoolmychoice

இதற்கிடையில், போர்ட்டிக்சனில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டத்தோ வி.எஸ்.மோகன், அதற்குப் பதிலாக ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் நெகிரி செம்பிலான் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஜெரம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்குப் பதிலாக வி.எஸ்.மோகன் அங்கு போட்டியிடுவார்.

நடப்பு ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் போர்ட்டிக்சனில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.