Home உலகம் பாலியல் கொடுமையை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – லண்டனில் மோடி பேச்சு!

பாலியல் கொடுமையை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – லண்டனில் மோடி பேச்சு!

999
0
SHARE
Ad

லண்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இங்கிலாந்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை லண்டன் சென்ற மோடியை எதிர்த்து, அங்கிருக்கும் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

காரணம், இந்தியாவில், காஷ்மீர் கதுவாவில், 8 வயது சிறுமி தொடர்ந்து 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார்.

அடுத்து, உத்தப்பிரதேசம் உன்னாவ் நகரில் இளம் பெண்ணை பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்து, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.

சூரத்தில், கிரிக்கெட் மைதானம் ஒன்றின் அருகே 11-வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

இப்படியாக இந்தியாவில் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. இச்சம்பவங்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் இருக்கையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதுபற்றி வாய் திறக்காமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டது வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்நிலையில், லண்டனில் இந்திய வம்சாவளியினர் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பாலியல் வன்கொடுமை செய்வது சமூகதத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம். இதனால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும், அவர்கள் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றும் மோடி உறுதியளித்திருக்கிறார்.