Home நாடு சீனாவின் தூதர் மகாதீரைச் சந்தித்தார்

சீனாவின் தூதர் மகாதீரைச் சந்தித்தார்

1080
0
SHARE
Ad
சீனத் தூதர் பாய் தியானுடன் மகாதீர்

புத்ரா ஜெயா – பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தொடர்ந்து பல்வேறு பிரமுகர்களையும், அயல் நாட்டுத் தூதர்களையும் துன் மகாதீர் சந்தித்து வருகின்றார்.

அந்த வரிசையில் இன்று வியாழக்கிழமை காலை சீனாவின் மலேசியத் தூதர் பாய் தியான் மகாதீரைச் சந்தித்தார்.

பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது சீனாவின் பங்கு மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ரோபர்ட் குவோக்கைத் தனது அலுவலகத்தில் சந்தித்த மகாதீரைப் பார்த்து ரோபர்ட் குவோக் “நீங்கள் நமது நாட்டைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்று கூறி சல்யூட் பாணியில் மரியாதை செலுத்தினார்.

அதற்கு பதிலளித்த மகாதீர் “இப்போது உங்களின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

சீன அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்ற வணிகர்களில் ஒருவரான ரோபர்ட் குவோக், சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நல்லுறவு தொடர முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நோக்கத்தில்தான் மகாதீரும் ரோபர்ட் குவோக்கைப் பார்த்து “உங்களின் உதவி தேவைப்படுகிறது” எனக் கூறினார் என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதன் தொடர்பில் இன்று சீனாவின் தூதரையும் சந்தித்திருக்கிறார் மகாதீர்.