Home நாடு “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”

“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”

1747
0
SHARE
Ad

மெந்தகாப் – “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்”  – என பகாங் மாநிலத்தின் சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி துரை ராஜு கூறியிருக்கிறார்.

பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த 19-05-2018 (சனிக்கிழமை) தேசிய வகை மெந்தகாப் குழுவகப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு கூறினார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் காமாட்சி துரைராஜூ எடுத்து வழங்கினார்.

#TamilSchoolmychoice

அவர் தம் உரையில் முதல் முறையாக தமிழ்ப் பள்ளியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி என்றும், அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கொடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கணினி கல்வி மட்டும் தான் ஒரு மனிதனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறிய அவர்  சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பகாங் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:

எண் மாணவர் பெயர் பள்ளியின் பெயர்
1 J. YUGAANTHINY SJKT KARAK, PAHANG
2 V. RAJESWARI SJKT KEMAYAN, PAHANG
3  R. RANJIT SJKT KUALA REMAN
4  R. MAHENDARAN SJKT LANCHANG, PAHANG
5 R. RAAGAVI SJKT BENTONG
6  M. THINENDERAN SJKT KUALA REMAN
7 M. VIKNESWARAN SJKT LANCHANG, PAHANG
8 R. NAVANITHAN SJKT TANAH RATA, C. HIGHLAND
9 R. KAVINESH SJKT SLBRONE, PAHANG
10 M. SHAMALA SJKT LANCHANG, PAHANG

மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 10 நிலை வெற்றியாளர்கள், தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.