மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மருத்துவமனையைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் அவரது கோபாலபுரம் இல்லம் மற்றும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களிலும் காவல் துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம் சென்றிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளிநபர்களை காவல் துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதியின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.