Home கலை உலகம் பிக் பாஸ் : வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் : வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார்

1230
0
SHARE
Ad

சென்னை – (ஜூலை 30 -அதிகாலை 12.30 மணி நிலவரம்)

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்து வழிநடத்தும் – கோடிக்கணக்கான இரசிகர்களை வாரந்தோறும் ஈர்த்து வரும் – பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். யஷிகா, மும்தாஜ், மகத், பொன்னம்பலம், வைஷ்ணவி ஆகிய ஐவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட முன்மொழியப்பட்டிருந்தனர்.

இவர்களில் பிரபல வானொலி அறிவிப்பாளரும் பழம் பெரும் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சாவியின் பேத்தியுமான வைஷ்ணவி இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே, வைஷ்ணவிக்கு மீண்டும் ஒரு மறுவாய்ப்பு வழங்கப்படுவதாகவும், வைஷ்ணவி தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலேயே தங்கியிருப்பார் – ஆனால் வேறொரு அறையில் தனியாகத் தங்கியிருப்பார் – என்றும் கமல் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளியேறிய நேரலை நிகழ்ச்சியில் அறிவித்தார்.