Home இந்தியா கருணாநிதி : உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு – பிறகு சீர் செய்யப்பட்டது

கருணாநிதி : உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு – பிறகு சீர் செய்யப்பட்டது

1067
0
SHARE
Ad
கருணாநிதி – கோப்புப் படம்

சென்னை – (மலேசிய நேரம் அதிகாலை 1.00 மணி, ஜூலை 30 நிலவரம்) காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் பின்னர் வழங்கப்பட்ட தீவிர தொடர் சிகிச்சையைத் தொடர்ந்து அந்தப் பின்னடைவு சரி செய்யப்பட்டு தற்போது அவரது உடல் நிலை சீராகியுள்ளது என்றும் திமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா கூறியிருக்கிறார்.

மருத்துவமனைக்கு வெளியே வந்த அவர் அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இந்த விவரங்களை வெளியிட்டார்.

இதற்கிடையில் திமுகவின் மூத்த தலைவர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோரும் மருத்துவமனை வந்தடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, கருணாநிதியின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே இருக்கின்றது என்றும் காவல் துறையின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆ.இராசா மேலும் தெரிவித்தார்.