Home இந்தியா கருணாநிதி உடல் நலத்தில் மாற்றமில்லை!

கருணாநிதி உடல் நலத்தில் மாற்றமில்லை!

1599
0
SHARE
Ad
படுக்கையில் இருக்கும் கருணாநிதியைச் சந்திக்கும் வெங்கையா நாயுடு

சென்னை – காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் திங்கட்கிழமை காலை வரையில் எந்தவித மாற்றமுமில்லை. நேற்றிரவு அவரது உடல் நலத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் பின்னர் வழங்கப்பட்ட தீவிர தொடர் சிகிச்சையைத் தொடர்ந்து அந்தப் பின்னடைவு சரி செய்யப்பட்டு தற்போது அவரது உடல் நிலை சீராகியுள்ளது என்றும் திமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா கூறியிருக்கிறார்.

கலைஞரைக் காண மருத்துவமனை வந்த அன்பழகன்

மருத்துவமனைக்கு வெளியே வந்த அவர் அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இந்த விவரங்களை நேற்று இரவு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இந்திய நேரம் 11 மணியளவில் திமுகவின் முக்கியத் தலைவர்களும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறத் தொடங்கினர்.

கருணாநிதி உடல் நலம் குறித்து சில வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து மருத்துவமனையின் முன்னால் குழுமியிருந்த கட்டுக் கடங்காத திமுக தொண்டர் கூட்டத்தைக் கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

#TamilSchoolmychoice

இந்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை வந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் இணைந்து கருணாநிதியை நேரில் சந்தித்த காட்சி வெளியிடப்பட்டது.