Home கலை உலகம் விஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்

விஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்

1769
0
SHARE
Ad
“வந்தவள் யார் அவள்’ நாடகக் கலைஞர்களுடன் விஜயசிங்கம்

கோலாலம்பூர் – மலேசியாவில் மேடை நாடகக் கலையை வளர்த்தெடுத்தவர்களில் – வார்த்தெடுத்தவர்களில் – முக்கியமானக் கலைஞர் இயக்குநர் கே.விஜயசிங்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அனுவத்தையும், ஆற்றலையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிப் படைக்கும் புதிய மேடை நாடகம் ‘வந்தவள் யார் அவள்’ என்ற தலைப்பில் தலைநகரில் அரங்கேறுகிறது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் கே.ஆர்.சோமா கலை, கலாச்சார அறவாரியத்தின் ஆதரவில், மலேசிய சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் சார்பாக விஜயசிங்கம் இந்த மேடை நாடகத்தைப் படைக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17, 18, 19 ஆகிய 3 தினங்களில் மாலை 7 மணிக்கு, கோலாலம்பூர் மியூசியம் நெகாரா அரங்கத்தில் (ஆடிட்டோரியம்) அரங்கேறும் இந்த நாடகம் இலவசமாக பொதுமக்களுக்குப் படைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகளுக்கிடையிலான பாசப் பிணைப்பு, திகில், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு என பல்வேறு சுவாரசியமான அம்சங்களுடன் இந்த மேடை நாடகத்தின் கதை – திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாடகத்தில் லோகன், சுலோக்‌ஷனா, விஜய்குமார், சரண்யா, தர்மதேவர், கீர்த்தனா பிரியா, அகத்தியன், பிரேமா, சுரேஹா, ஏ.எம்.ஆர்.பெருமாள், கௌசல்யா, குமாரி ரெஷ்வினா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நாடகத்தின் வசனங்களை ரெ.சண்முகம் எழுதியிருக்க இசையமைப்புப் பணிகளை ஸ்டீபன் கவனிக்கிறார். சைமன் ஞானமுத்துவின் தயாரிப்பு மேற்பார்வையில் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது.

இந்நாடகத்தின் கதை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பணிகளை விஜயசிங்கம் கவனிக்கிறார்.

இந்த நாடகம் குறித்த மேல்விவரங்கள் பெற விரும்புவோர் விஜயசிங்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்: 012-3728081