Home நாடு ஜோ லோ’வின் ‘இக்குனாமிட்டி’ கிள்ளான் துறைமுகம் வருகிறது

ஜோ லோ’வின் ‘இக்குனாமிட்டி’ கிள்ளான் துறைமுகம் வருகிறது

1251
0
SHARE
Ad
‘இக்குனாமிட்டி’ ஆடம்பர உல்லாசப் படகு

கிள்ளான் – 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தலைமறைவாக இருக்கும் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ தெக் லோவுக்குச் (ஜோ லோ) சொந்தமானது என்றும் 1எம்டிபி ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என்றும் நம்பப்படும் இக்குனாமிட்டி என்ற பெயர் கொண்ட ஆடம்பர உல்லாசப் படகு நாளை செவ்வாய்க்கிழமை கிள்ளான் துறைமுகம் வந்தடைகிறது.

அமெரிக்க நீதித் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்து இந்தோனிசிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, இன்று திங்கட்கிழமை காலை இந்தோனிசியாவின் பத்தாம் தீவுக்குக் கொண்டு வரப்பட்ட, 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட அந்தப் படகு அங்கிருந்து புறப்பட பத்தாம் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 4.45 மணியளவில் அந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டது.

அடுத்து அந்தப் படகு நாளை கிள்ளான் துறைமுகம் வந்தடையும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலேசியக் காவல் படையினரின் துணையுடன் அந்தப் படகு தற்போது கிள்ளான் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.