Home வணிகம்/தொழில் நுட்பம் ஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்

ஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்

1026
0
SHARE
Ad

சியோல் – 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தனது முத்திரையைப் பதித்திருக்கும் தருணத்தில், அதற்கு உலகின் முதல் நிலை போட்டியாளராகத் திகழும் சம்சுங் நிறுவனமும் தொடர்ந்து தனது வணிக விரிவாக்கத்தில் மும்முரம் காட்டி வருகிறது.

தொலைத் தொடர்பு மற்றும் மின்னியல் துறையில் தனது அனைத்துலக ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில், தென் கொரியாவின் சம்சுங் நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் 22 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வுக்காக செலவிடவிருக்கிறது.

5ஜி எனப்படும் அடுத்த கட்ட தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சாம்சுங் குழுமம் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது நினைவக சில்லுகள் தயாரிப்பதிலும், கைத்தொலைபேசிகள் தயாரிப்பதிலும் உலகிலேயே முதன்மை நிறுவனமாக சம்சுங் திகழ்ந்து வருகிறது.