Home நாடு மொகிதின் யாசினுக்கு புற்று நோயா?

மொகிதின் யாசினுக்கு புற்று நோயா?

1255
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு உண்மையிலேயே என்ன நோய் என்பது குறித்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெர்சாத்து கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பிரதமர் துன் மகாதீர் கோடி காட்டியதிலிருந்து மொகிதினுக்கு புற்று நோய் தாக்கியிருக்கிறது எனத் தெரிகிறது.

மொகிதின் கிமோதெராபி எனப்படும் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அவருக்கான அடுத்த கட்ட சிகிச்சை அதிக காலம் பிடிக்கும் என்றும் மகாதீர் கூறியிருக்கிறார். ஜூலை 12 முதல் விடுமுறையில் இருந்து வரும் மொகிதின் யாசின் மேலும் ஒரு மாதத்துக்கு விடுமுறையில் இருந்து வருவார் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுவாக புற்று நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட நோயாளிகளுக்கும்தான் கிமோதெராபி என்ற இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் புற்று நோய் கொண்டிருக்கும் இரத்த அணுக்கள் செயலிழக்கச் செய்யப்படும் வகையில் இரத்த சுத்திகரிப்பு செய்யப்படும்.

மொகிதினைத் தான் சந்தித்ததாகவும், அவர் வழங்கப்பட்டு வரும் இந்த சிகிச்சைகளுக்கு ஏற்ப அவரது உடல் நலம் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் மகாதீர் கூறியுள்ளார்.