Home உலகம் “விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்

“விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்

1085
0
SHARE
Ad

சிங்கப்பூர் – கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்காக தொடர்ந்து உலகம் முழுவதும் பல தலைவர்கள் தங்களின் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணனும் (படம்) சிங்கை அரசாங்கத்தின் சார்பில் அனுதாபச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவியன் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் “தங்களது தந்தை கருணாநிதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதி இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர். தனது வாழ்க்கையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். இந்த துயரமான நாளில் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தாருக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த கருணாநிதி மறுநாள் சென்னை கடற்கரை அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.