ஜாகர்த்தா – நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலும் மாலையிலும் மத்திய இந்தோனிசியத் தீவான லொம்போக்கை உலுக்கிய 6.9 ரிக்டர் புள்ளிகள் கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5 பேர் கொல்லப்பட்டதோடு, 40 பேர் வரை காயமடைந்தனர்.
முதல் அதிர்வு உள்ளூர் நேரப்படி காலை 11.10 மணிக்கு ஏற்பட்டது. அடுத்த அதிர்வு இரவு 9.56-க்கு நிகழ்ந்தது. கடந்த ஜூலை 27, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து மீண்டும் நேற்றைய அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
நேற்றைய நிலநடுக்கத்தில் சுமார் 200 வீடுகள் மோசமாக சேதமடைந்ததோடு, மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து இரவு முழுவதும் அச்சத்தின் காரணமாக திறந்த வெளியில் படுத்துறங்கினர்.
ஜூலை 27 நிலநடுக்கம் இதுவரையில் 465 பேர்களை பலிகொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.