Home நாடு குவான் எங் விடுதலை : குற்றச்சாட்டுகளை மீட்பதாக அறிவித்தது ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர்தான்!

குவான் எங் விடுதலை : குற்றச்சாட்டுகளை மீட்பதாக அறிவித்தது ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர்தான்!

1004
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பங்களா வாங்கிய வழக்கில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறிக்கை ஒன்றின் விளக்கம் அளித்திருக்கும் அவரது வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் (படம்) “இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என ஊழல் தடுப்பு ஆணையம் கூறக் கூடாது. காரணம், ஊழல் தடுப்பு ஆணையத்தை நீதிமன்றத்தில் பிரதிநிதித்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர்தான் குவான் எங் மீதான குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார்.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் லிம் குவான் எங்

நேற்று நடைபெற்ற லிம் குவான் எங் மீதான வழக்கின்போது ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்ட மற்றும் வழக்கை நடத்தும் பிரிவின் இயக்குநர் முகமட் மாஸ்ரி டவுட் நீதிமன்றத்தில் இருந்ததையும் ராம் கர்ப்பால் சுட்டிக் காட்டினார்.

நீதிமன்றத்தின் முடிவு குறித்து மாஸ்ரி டவுட் எந்தவித ஆட்சேபணையும், அதிருப்தியும் தெரிவிக்கவில்லை என்பதையும் ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைக்கு ஏற்பவே நீதிபதி சரியான முடிவை எடுத்தார் என்றும் ராம் கர்ப்பால் தனது அறிக்கையில் தெரிவித்தார்.