Home நாடு பங்களா விவகாரம்: லிம் குவான் எங் விடுதலை

பங்களா விவகாரம்: லிம் குவான் எங் விடுதலை

1175
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் லிம் குவான் எங் வாங்கிய பங்களாவின் விற்பனைப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவருக்கும் பாங் லி கூன் என்பவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை மீட்டுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து குவான் எங், பாங் லி கூன் இருவரும் பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

லிம் குவான் எங் மீதிலான குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டதால், அவர் தொடர்ந்து நிதி அமைச்சராகத் தொடர்வதில் இனி எந்தவிதச் சிக்கலும் இல்லை. அவரது வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவர் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது குறித்து சில சர்ச்சைகள் இருந்து வந்தன.