Home இந்தியா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து

1137
0
SHARE
Ad

சென்னை – அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஸ்டாலின் அண்மையில் திமுகவின் இரண்டாவது தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நல்லுறவுகள் தொடர்ந்து பேணப்படவும், முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும், தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும், சரவணன் ஸ்டாலினுடன் விவாதித்தார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவையும் சரவணன் மரியாதை நிமித்தம் சென்னையில் சந்தித்தார்.