Home நாடு மசீச தலைமையகம் : 23 மாடிகள் கட்டடம் உடைக்கப்பட்டு 70 மாடிகளாக எழுகிறது

மசீச தலைமையகம் : 23 மாடிகள் கட்டடம் உடைக்கப்பட்டு 70 மாடிகளாக எழுகிறது

864
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் அம்னோவுக்கு நிகராக செல்வச் செழிப்பு கொழிக்கும் கட்சி மலேசிய சீனர் சங்கம் (மசீச). அதன் முக்கிய சொத்துகளில் ஒன்று ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள அதன் 23 மாடிகளைக் கொண்ட தலைமையகக் கட்டடம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் அமைந்துள்ள பகுதி தற்போது நாட்டின் மிக முக்கிய வணிக வளாகங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தலைமையகக் கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் 70 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் ஒன்றை நவீன தேவைகளுக்கேற்ப மசீச உருவாக்க விருக்கின்றது.

கோலாலம்பூர் மாநகரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வடிவமைப்புத் திட்டங்களின்படி 70 மாடிகளைக் கொண்ட கட்டடம், அதில் 8 மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடம், 24 மாடிகளில் 328 அறைகளைக் கொண்ட தங்கும் விடுதி, 68-வது, 69-வது மாடிகளில் உணவகங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.