Home உலகம் வெள்ளை மாளிகையிலிருந்து சிஎன்என் பத்திரிக்கையாளரை வெளியேற்றிய டிரம்ப்

வெள்ளை மாளிகையிலிருந்து சிஎன்என் பத்திரிக்கையாளரை வெளியேற்றிய டிரம்ப்

853
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், உலகின் முன்னணி தொலைக்காட்சியான சிஎன்என் நிறுவனத்திற்கும் இடையிலான மோதல்கள் நீண்ட காலமாக நீடித்து வருகின்றன. அந்த மோதல் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 8) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் வெளிப்பட்டது.

சிஎன்என் நிருபர் ஜிம் அகோஸ்தா, டிரம்பை நோக்கி கேள்வி ஒன்றை முன்வைக்க, அதற்குப் பதிலளிக்காமல் டிரம்ப், “நீங்கள் சிஎன்என் தொலைக்காட்சியில் வேலைபார்க்க தகுதியற்றவர். நீங்கள் நீக்கப்பட வேண்டும். உங்கள் கேள்விக்கு பதிலளிக்கமாட்டேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அந்த நிருபர் பத்திரிக்கையாளர் கூட்டத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.

அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும்போது அவருக்கான நுழைவு அனுமதி அட்டையை தந்துவிட்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே தந்து விட்டு சென்றார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து டிரம்பின் நடவடிக்கைக்கு ஊடகங்கள் அமெரிக்காவில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

மத்திய கால நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவு, பத்திரிக்கையாளர்களுடன் மோதல், அரசு தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ் நீக்கம் என பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கிடையில் டிரம்ப் பாரிஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முதலாம் உலகம் போரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் பாரிஸ் சென்றுள்ளார்.