Home உலகம் அமெரிக்கத் தலைமை வழக்கறிஞரை டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்

அமெரிக்கத் தலைமை வழக்கறிஞரை டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்

1015
0
SHARE
Ad

வாஷிங்டன் – தனது அடுத்த அதிரடியாக அமெரிக்காவின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜெஃப் செஷன்சை (அட்டர்னி ஜெனரல்) அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (நவம்பர் 7) தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக ஜெஃப் செஷன்ஸ் அறிவித்துள்ளார்.

நடைபெற்ற மத்திய கால பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

டிரம்ப் மீதான இரஷியத் தொடர்புகள் குறித்த விசாரணைகளை முடக்கும் விதமாகவும் நடப்பு தலைமை வழக்கறிஞரை நீக்கிவிட்டு, புதிய அரசு தலைமை வழக்கறிஞரை நியமிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.