Home இந்தியா சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை

சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை

979
0
SHARE
Ad

சென்னை – இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.

அவருடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

“கூட்டணி அமைக்கும் முதல் கட்டமாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இனி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும்” என சுருக்கமாக ஸ்டாலின் தனதுரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

சந்திரபாபு நாயுடுவோ, பாஜக, நமது நாட்டின் சுதந்திரமான அமைப்புகளை சிதைத்து வருகிறது என்றும் அந்த ஆட்சியை அகற்ற அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இந்த நோக்கத்தோடு கர்நாடக முதல்வர் குமரசாமியையும் தான் சந்தித்ததாகவும், விரைவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும் தான் சந்திக்கவிருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

“இந்தக் கூட்டணியை இணைக்கவும், அமைக்கவும் நான் முயற்சி எடுக்கிறேனே தவிர நான் பிரதமர் வேட்பாளர் அல்ல” என்றும் சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியிருக்கிறார்.